ராணிப்பேட்டை இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலி..

ராணிப்பேட்டை இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலி..
X

விபத்து

விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வாலாஜா - சோளிங்கர் சாலையில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாலிபர் செல்லும் வழியில் உயிரிழப்பு. மேலும் எதிரே வந்து மோதிய வாலிபர் ஆபத்தான நிலையில் வேலூர் அரசு தலைமை அடுக்கும்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வாலாஜா போலிசார் விசாரணை நடத்தியதில் திருவள்ளூர் மாவட்டம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முரளி மெடிக்கல் ரெப்பக்கா பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணமாகி 5 மாத கை குழந்தை உள்ளது. இந்த நிலையில் சோளிங்கர் சாலையில் இருந்து வாலாஜா நோக்கி வந்த முரளி வாலாஜாவில் இருந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிய தலங்கை பகுதியை சேர்ந்த ரமேஷ் எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் முரளி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உயிரிழந்த முரளியின் மனைவி சரண்யா வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story