அம்பத்தூரில் மூடப்பட்ட பெயிண்ட் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

அம்பத்தூரில் மூடப்பட்ட பெயிண்ட் கம்பெனியில் பயங்கர தீ விபத்து
தீ விபத்து
சென்னை அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் பல ஆண்டுகளாக மூடப்பட்ட பெயிண்ட் கம்பெனியில் பயங்கர தீவிபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் பல ஆண்டுகளாக மூடப்பட்ட பெயிண்ட் கம்பெனியில் பயங்கர தீவிபத்து, அருகில் பெட்ரோல் பங்க் இருக்கும் நிலையில், MTH பிரதான சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. சாலை முழுவதும் தீ பரவி வருகிறது தீ விபத்து ஏற்பட்டு அருகில் இருக்கக்கூடிய ட்ரான்ஸ்பர் வெடித்து சிதறக்கூடிய காட்சி வாகன ஓட்டிகள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. தீயை அணைக்கும் பணியில் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். MTH சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags

Next Story