பொதுமக்களிடம் பணம் கேட்டு பேரம் பேசும் வீடியோ வைரல்

பொதுமக்களிடம் பணம் கேட்டு பேரம் பேசும் வீடியோ வைரல்

புதுக்கோட்டை மின் பிரிவு அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளர் தேவ சுந்தர்ராஜ் மின் இணைப்பிற்காக பொதுமக்களிடம் பேரம் பேசும் வீடியோ வைரலாகி உள்ளது.


புதுக்கோட்டை மின் பிரிவு அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளர் தேவ சுந்தர்ராஜ் மின் இணைப்பிற்காக பொதுமக்களிடம் பேரம் பேசும் வீடியோ வைரலாகி உள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மின் பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை மின் பொறியாளர் தேவ சுந்தர்ராஜ் என்பவர் மின் இணைப்பிற்காக மின்கம்பங்கள் நடுவதற்கு பொதுமக்களிடம் பணம் கேட்டு பேரம் பேசும் வீடியோ வைரல் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு மற்றும் தொழிற்சாலைகளுக்கு புதிதாக மின் இணைப்பு பெறுபவர்கள் தங்கள் பகுதிக்கு மின் இணைப்பை கொண்டு வருவதற்கான மின்வாரியத்திடம் மனு செய்து அணுகும் போது மின்வாரியமே மின் கம்பங்களை மின்வாரிய பணியாளர்களை கொண்டு மின்வாரியமே நட்டு மின் இணைப்பு வழங்க வேண்டும் இதற்காக பொதுமக்களிடம் எந்தவித பணமும் வசூலிக்க கூடாது என்ற உத்தரவும் உள்ளது மேலும் இதற்கான உத்தரவை தூத்துக்குடி மின் பகிர்மான பட்ட மேற்பார்வை பொறியாளராக உள்ள குருவம்மாள் வழங்க வேண்டும்.

ஆனால் அவர் இதற்கு முறையாக அனுமதி வழங்காமல் இழுத்து அடித்து வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது இங்கு இளநிலை மின் பொறியாளராக தேவசுந்தர்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார் இளநிலை மின் பொறியாளர் தேவ சுந்தர்ராஜ் மின் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்த ஒரு மின் நுகர்வோரிடம் மின் இணைப்பிற்காக மின்கம்பம் நட்ட வண்டி வாடகை மற்றும் லேபர் கூலி என சுமார் 2000 முதல் 7ஆயிரம் வரை செலவாகும் எனவே அதற்குரிய செலவுத் தொகையை வழங்க வேண்டும் ஏற்கனவே தான் கையில் இருந்து பணம் போட்டு பல பகுதிகளில் மின்கம்பம் நட்டி உள்ளதால் தனக்கு கைபிடித்தம் ஏற்படுகிறது எனக் கூறும் அவர் பேசிய பணத்தை கொடுத்தால் உங்களுக்கு மின்கம்பம் நடப்படும் இல்லையென்றால் இங்கிருந்து கிளம்பவும் என வெளிப்படையாக கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதன் மூலம் தமிழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் விளம்பர திமுக ஆட்சியில் லஞ்ச ஊழல் தலை விரித்து ஆடுவது தெரியவந்துள்ளது

Tags

Next Story