பசுமாட்டை விரட்டிய காட்டு யானையால் பரபரப்பு!
நீலகிரி மாவட்டம் கூடலூர், மொளப்பள்ளி அருகே மேய்ச்சில் ஈடுபட்டிருந்த பசு மாட்டை காட்டு யானை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. மேலும் மனித - விலங்கு எதிர்கொளள்களும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய மொளப்பள்ளி பழங்குடியினர் குடியிருப்பு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை, அப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பசு மாட்டை மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்கியது.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ஒலி எழுப்பியதால் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த அப்பகுதி வாசிகள் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்கும் வகையில் அகழிகள் அமைக்கவும் ஊருக்குள் நுழையும் காட்டு யானையை விரட்ட ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.