தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு பண்டிகை: உற்சாகக் கொண்டாட்டம்
ஆடிப்பெருக்கு
தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு இன்று பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்.
விவசாயத்தை காக்கும் காவிரி அன்னையை போற்றும் வகையில், தமிழ் மாதமான ஆடி 18 ஆம் தேதி, ஆடிப் பெருக்கு என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த நல்ல நாளில் புது மண தம்பதிகள் மாங்கல்யத்தை பிரித்து கோர்த்து அணிந்து கொள்வதால், மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கு விழா டெல்டா பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பவானி, ஈரோடு, திருச்சி, திருவையாறு, கும்பகோணத்தில் பூஜைகள் செய்யவும், புனித நீராடவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Next Story