ஆவின் நெய் தள்ளுபடி விற்பனை இந்த மாதம் இறுதிவரை நீட்டிப்பு

ஆவின் நெய் தள்ளுபடி விற்பனை இந்த மாதம் இறுதிவரை நீட்டிப்பு

ஆவின் நெய் 

ஆவின் நெய் தள்ளுபடி விற்பனை இந்த மாதம் இறுதிவரை நீடிக்கப்படுகிறது, அதேபோல் பன்னீரின் சலுகை விலையும் நீட்டிக்கப்படுகிறது.
ஆவின் நிறுவனம் காலத்திற்கேற்ப மற்றும் பொதுமக்களின் விருப்பத்தை அறிந்து பால் உபபொருட்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற மற்றும் பொதுமக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய்யினை கடந்த மூன்று மாதங்களாக ஒரு லிட்டருக்கு 50 ரூபாய் தள்ளுபடியோடு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தள்ளுபடியானது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இதனை மார்ச் 31 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பன்னீர் கடந்த மூன்று மாதங்களாக சலுகை விலையில் 200 கிராம் ரூபாய் 120 லிருந்து ரூபாய் 10 குறைத்து ரூபாய் 110 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தள்ளுபடியினையும் தொடர்ந்து நீட்டிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags

Next Story