ஆவின் பால் மீண்டும் தட்டுப்பாடு!

ஆவின் பால் மீண்டும் தட்டுப்பாடு!

ஆவின் பால்

தூத்துக்குடி ஆவின் நிறுவனத்தின் வயலட் நிற பாக்கெட்டில் வரும் டிலைட் ஆவின் பால் மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் ஃபுல் கிரீம் மில்க் சுமார் 2500 லிட்டர் குறைத்து அனுப்பப்பட்டதால் தட்டுப்பாடு பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பாதிப்பு.
தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆவினுக்கு பாலை வழங்காமல் இருந்து வந்தனர் இதன் காரணமாக தமிழகத்தில் பல நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழக்கமாக சுமார் 35ஆயிரம் லிட்டர் ஆவின் பால் வழங்கப்படும் இந்நிலையில் கோடை காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஆவின் நிர்வாகம் வழங்க வேண்டிய தொகையை முறையாக வழங்காததால் விவசாயிகள் ஆவின் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டிய பாலை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட துவங்கி உள்ளது. தூத்துக்குடி மாநகர பகுதிக்கு இன்று ஆவின் நிர்வாகம் சார்பில் சுமார் 2500 லிட்டர் முதல் 3000 லிட்டர் வரை ஆவின் பால் பாக்கெட் குறைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆவின் டிலைட் எனப்படும் வயலட் நிற பாக்கெட் மற்றும் ஆவின் புல் க்ரீம் எனப்படும் ஆரஞ்சு நிற பாக்கெட் ஆவின் பால் முகவர்கலுக்கு குறைத்து அனுப்பப்பட்டது இதன் காரணமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முகவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் காலை 10 மணிக்கு மேல் ஆவின் பால் முற்றிலும் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கோடை காலத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story