வேகமெடுக்கும் மஞ்சள் காய்ச்சல்..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ் !

வேகமெடுக்கும் மஞ்சள் காய்ச்சல்..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ் !

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக சுகாதார நிறுவனத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் காலை 11 மணி முதல் 9 மணி வரை தடுப்பூசி வழங்கப்படும். இந்த 3 மையங்களிலும், அசல் கடவுச் சீட்டு மற்றும் சுய விவர குறிப்புடன் பதிவு செய்து 300 ரூபாய் செலுத்தி தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story