9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு!!

9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு!!

rain

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையொட்டி இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யும். மேலும் அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story