அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி நடவடிக்கை - கோரிக்கை

நினைவஞ்சலி


கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர் இந்த சம்பவத்தின் 6 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது இதையொட்டி தூத்துக்குடி பாத்திமா நகரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் முன்பு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு ஆலயபங்கு தந்தை ஜேசுதாஸ் தலைமையில் அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்தனர் பின்னர் பொதுமக்கள் கூறுகையில் இந்த துப்பாக்கிச் சுட்டிற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைப்படி தமிழக அரசு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பலியான தியாகங்கள் நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்தனர்



