வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நாளை முதல் நடவடிக்கை!

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நாளை முதல் நடவடிக்கை!

அமைச்சர் சிவசங்கர்

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து, போக்குவரத்துத் துறை ஆணையர் முடிவு செய்வார் என்றும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அறிவிப்பின்படி 15 ஆண்டுகள் கடந்த பேருந்துகள் காலாவதியான பேருந்துகளாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கால அவகாசம் கோரி இருக்கும் நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் அதனை பரிசீலனை செய்வார் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story