பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை - பால்வளத்துறை
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
பால் கொள்முதலை நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டராக உயர்த்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பால்வளத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம அளவில் 9189 தொடக்கப்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் 3.91 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து 2023-24ம் நிதியாண்டில் கிராமப்புற மக்களின் தேவைக்கு உள்ளூர் விற்பனை செய்தது போக சராசரியாக மாவட்ட ஒன்றியங்களில் மூலம் நாள் ஒன்றுக்கு 28.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒன்றியங்களில் மூலம் 34.22 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் கடந்த ஜூன் 14ம் தேதி அன்று எய்தப்பட்டுள்ளது என்றும், பால் கொள்முதலை நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டராக உயர்த்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story