பைக் சாகசங்கள் செய்பவர்களை சீர்திருத்த நடவடிக்கை - உயர்நீதிமன்றம்

பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி, சாகசங்களில் ஈடுபட்டு, அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஆசிக், முகமது சாதிக் ஆகிய இருவர் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எதிர்காலங்களில் இதுபோன்ற வழக்குகளை கையாள்வதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

Tags

Next Story