நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக, எதிர்பாராவிதமாக திடீரென உயிரிழந்தார்.

திருவான்மியூரில் வசித்து வந்த டேனியல் பாலாஜிக்கு, நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டு, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி டேனியல் பாலாஜி உயிரிழந்தார். மறைந்த நடிகர் முரளியின் தம்பியான டேனியல் பாலாஜிக்கு, சென்னை அயனாவரம், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே இருக்கும், வரதம்மாள் கார்டன் என்ற முகவரியில் பூர்வீக வீடு உள்ளது.இந்த இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான இவர் காக்கா காக்கா, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த், வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாறன் என இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. திருவான்மையூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளா.ர் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் நடிகராக நடிப்பார். டேனியல் பாலாஜி 58-வயதிலேயே உயிரிழந்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரைப்பட நடிகர்களும் டேனியல் பாலாஜி மறைவு செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்து வருகின்றனர். டேனியல் பாலாஜியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களிலும் அவரது ரசிகர்கல் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இன்று மாலை, 4 மணியளவில், ஓட்டேரி மின் மயானத்தில், டேனியல் பாலாஜி உடல் எரியூட்டப்படவுள்ளது.

டேனியல் பாலாஜி விருப்பப்படி, மறைந்த உடன், அவரது கண்கள் தானம் செய்யப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story