சசிகலாவை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்..

சசிகலாவின் புதிய இல்ல கிரக பிரவேசத்தில் நடிகர் ரஜினிகாந்த கலந்து கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் புதிதாக கட்டப்பட்டுள்ள இல்ல கிரகப்பிரவேசத்திற்கு வருகை தந்து சசிகலாவை சந்தித்தார். சசிகலா உடனான ஒன்றரை மணி நேர சந்திப்பிற்கு பிறகு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில் இன்றைய சந்திப்பின் முக்கியத்துவம் கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. இந்த வீடு கோயில் போல உள்ளது சசிகலாவுக்கு பெயர் புகழ் நிம்மதி இந்த வீடு வழங்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இடத்தை பூர்த்தி செய்ய தமிழகத்தில் யார் உள்ளார்கள் என்ற கேள்விக்கு அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறினார். அடுத்த படத்திற்கான வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்...

Tags

Next Story