அடுத்த சம்பவத்துக்கு ரெடியான விஜய் - கட்சியினருக்கு பறந்த முக்கிய அறிவிப்பு
![அடுத்த சம்பவத்துக்கு ரெடியான விஜய் - கட்சியினருக்கு பறந்த முக்கிய அறிவிப்பு அடுத்த சம்பவத்துக்கு ரெடியான விஜய் - கட்சியினருக்கு பறந்த முக்கிய அறிவிப்பு](https://king24x7.com/h-upload/2024/02/18/398610-vijay.webp)
நடிகர் விஜய்
விஜய் தொடங்கிய அரசியல் கட்சியின் பெயரில் திருத்தம் செய்த நிலையில் நாளை பனையூரில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 என்ற கோட் படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய் அதற்கான பணிகளை தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் செய்து வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் களம்கண்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் அனைத்து வார்டுகளும் ஆளும் திமுக மற்றும் ஆட்சி செய்த அதிமுகவுக்கு எதிராக போட்டியிட்டனர்.
சில இடங்களில் திராவிட கட்சிகளை வீழ்த்தி விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றிப்பெற்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு உதவுவது, கல்வி உதவி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் என பொது சேவையில் ஈடுபட்டு வந்த விஜய் கடந்த 2ம் தேதி தான் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாக அறிவித்தது. தனது கட்சிக்கு ”தமிழக வெற்றி கழகம்” என பெயரிட்டுள்ளதாக அறிவித்தார்.
கட்சிக்கு சின்னம் ஒதுக்குவது, கட்சிக்கொடி தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனது தமிழக வெற்றி கழகம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாது என்ற விஜய், 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத்தில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்தார். கட்சி சின்னம் மற்றும் கொடி தொடர்பாக ஒப்புதல் பெற தேர்தல் ஆணையத்தை சந்திக்க புஸ்ஸி ஆனந்த் டெல்லி சென்றிருந்தார்.
இதற்கிடையே விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து கூறினர். அதேநேரம், விஜய்யின் கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் எழுந்தன. விஜய் வெற்றி கழகம் பெயரில் இலக்கண பிழை இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின்பெயரைல் ’க்’ விடுப்பட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். கட்சி பெயரிலேயே தவறு இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது கட்சி பெயரில் அதிரடி மாற்றத்தை விஜய் கொண்டு வந்துள்ளார். தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என விஜய் அறிவித்துள்ளார். கட்சி பெயரில் இருந்த இலக்கண பிழையை திருத்தி அறிவித்துள்ள விஜய் மீண்டும் அரசியலில் கவனத்தை ஈர்த்து வருகிறார். பெயரில் இருக்கும் இலக்கண பிழையை திருத்திய விஜய்க்கு அவரது ரசிகர்களும், கட்சியினரும் வவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் அடுத்தக்கட்டமாக முக்கிய அறிவிப்பை விஜய் அறிவித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை பனையூரில் நடைபெற உள்ளதாகவும், காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட தலைமை நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை என்பதால் விஜய் தனது கட்சியை விரிவாக்கம் செய்ய அடுத்தக்கட்ட வேலைகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வ்ருகின்றனர். அதேநேரம், நாளை நடைபெறும் கூட்டத்தில் விஜய் கலந்து கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளதுwa.