நடிகர் விஜய் கட்சியினர் நிகழ்ச்சிக்கு தடை: போலீசார் பாதுகாப்பு
தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலை நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டு தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது.
இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறேவதாக அறிவிக்கப்பட்டு பெண்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு இருந்தது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதால் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் தின நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது நிகழ்ச்சி நடைபெற இருந்த திருமண மண்டபத்தை காவல்துறையினர் பூட்டு போட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக நலத்திட்ட உதவிகளை பெற வந்த ஏராளமான பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்