அஞ்சாமை படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியீடு

அஞ்சாமை படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியீடு

Trailer

விதார்த் நடிப்பில் உருவாகி உள்ள அஞ்சாமை பட ட்ரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு " அஞ்சாமை " என பெயரிடப்பட்டுள்ளது. எஸ் பி சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜூன் மாதம் படம் வெளியாகிறது. படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு வாரியம். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags

Next Story