பா.ஜ.கவிலிருந்து நடிகை கௌதமி விலகல் வருத்தமளிக்கிறது- வானதி சீனிவாசன்

தேசிய அளவிலான பதவிகளை கூட மறுத்துவிட்டு கட்சியின் அடிப்படை தொண்டரை போலப் பணியாற்றிய நடிகை கௌதமி பா.ஜ.கவில் இருந்து விலகியது தனக்கு வருத்தமளிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

ஆயுதபூஜை,விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பூஜை செய்தார்.மேலும் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான நம்ம எம்.எல்.ஏ வாகனங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கடந்த ஆண்டு கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் கார் சிலிண்டர் வெடிகுண்டு நிகழ்வு நடத்தி உள்ளார்.கார் வெடிகுண்டு குறித்து என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை மாநகரம் பாதுகாப்பு அற்ற சூழலில் இருப்பதாக தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருவதாக தெரிவித்தவர் கோவை மாநகர பாதுகாப்பு நலன் கருதி இன்று காலை கோவிலில் சிறப்பு வழிபாடு நடைநடைபெற்றது , தமிழகத்தில் சட்ட ஒழுங்க பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகவும் புகார் அளித்தாலும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.பல்வேறு குற்றச்சாட்டுகள் மாநில அரசின் மீது உள்ளது எனவும். பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் ஏதேனும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தால் உடனடியாக காவல்துறை கைது செய்கிறது.ஆனால் திமுகவினர் பிரதமர் மோடியை அவதூறாக பேசி வருகிறார்கள் திமுகவினரை கைது செய்யாமல் பாஜகவிரை கைது செய்து வருகிறது எனவும் திமுகவினர் பாஜக தொண்டர்கள் கைது செய்வது,தாக்குவது குறித்து தேசிய தலைமை குழு அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பாஜக நிர்வாகிகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்கப்படும் என்று கூறினார்.திமுக அரசு பயங்கரவாதம் செய்வார்களை விட்டுவிட்டு அண்ணாமலை வீட்டில் அருகே இருந்த கொடி கம்பத்தை இரவோடு இரவாக அகற்றியது. கௌதமி மீது தனக்கு அதிகளவு அன்பு இருப்பதாகவும் தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்மணி என்றும், கௌதமியை தேசிய அளவில் வேலை செய்வதற்காக அழைத்த போது கௌதமி மாநில அளவிலே வேலை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்ததாக கூறினார். மாநில அளவிலான வேலைகள் இல்லாததால் கௌதமியை சரிவர பார்க்க முடியவில்லை. கடந்த மாதம் கூட அவரிடம் அலைபேசி மூலம் அழைத்து பேசியதாகவும் கூறினார்.தான் ஒரு நடிகை என்று நினைக்காமல் கட்சியின் அடிமட்ட தொண்டராக கட்சியின் பணியாற்றியவர் கவுதமி என்றும் அவர் அளித்த கடிதம் மனவேதனையாக இருப்பதாகவும் தன்னம்பிக்கையும், தைரியமிக்க பெண் கௌதமி என்றும் எந்த உதவியும் செய்வதற்கு தயாராக இருந்த நிலையில் விலகுவதாக கூறியது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.புகார் தொடர்பாக கௌதமிக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கேட்டால் உதவி செய்து தருவேன் என்று வானதி கூறினார். லியோ படம் பார்ப்பதற்கு நேரமில்லை விடுமுறை நாட்கள் வாய்ப்பு இருந்தால் படத்தை பார்ப்பேன் என்று கூறினார்.சினிமா அரசியல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரித்து பார்க்க முடியாது ஒன்று.நல்ல பொழுதுபோக்கான படத்தை பார்ப்பதில் தப்பில்லை என தெரிவித்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற அலுவலக பணியாளர்கள், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story