அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை - அரசாணை வெளியீடு
பைல் படம்
2024- 2025 ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான அரசாணை வெளியீடு செய்யப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கையில் ஈடுபடலாம் எனவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் தனியார் சுயநிதி கல்லூரிகளில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கையில் ஈடுபடலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் கல்லூரிகள் அவை சார்ந்த பல்கலைக்கழகங்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பிறகு கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை கோரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் மாணவர் சேர்க்கை இந்த கல்வி ஆண்டிற்கு மட்டுமே பொருந்தும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story