கிராமப்புற சாலைகளுக்கு கூடுதல் நிதி - நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்.

கிராமப்புற சாலைகளுக்கு கூடுதல் நிதி -  நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்.

 நயினார் நாகேந்திரன்

ஊரகப் பகுதிகளில் சாலைகள் மேம்படுத்த வேண்டும், சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில் சாலைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என பாமக, பாஜக, சிபிம், சிபிஐ சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை நிகழ்வின் போது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிராம சாலைகளை மேம்படுத்துவதற்காக நான்காயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 10 ஆயிரம் கிலோமீட்டர் ஊரக சாலை மேம்படுத்தப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு தொடர்பாக பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கு நான்காயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்பதாகும். ஆனால் சாலைகள் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசித்து பணிகள் மேற்கொள்ளவேண்டும் அதேபோல் ஒதுக்கப்பட்ட நிதியில் 10 கோடி ரூபாய் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்க வேண்டும் அல்லது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும், மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்ட கிராமங்கள் வயல் உள்ள பகுதிகளில் இரு புறங்களும் தடுப்பு சுவர்கள் அமைத்து சாலைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அதேபோல் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பேசும் போது, கிராமத்தின் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்துவது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழி வகையாக அமையும் அதற்காக முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பை வரவேற்பதாகவும் அதே வேலையில் கிராமப்புறங்களில் சாலைகள் முறையாக இல்லை என்றால் அது தொடர்பாக அதிகாரிகள் இணையத்தில் பதிவிட வேண்டுமென தெரிவிக்கிறார்கள். ஆனால் இணையத்தில் பதிவிடும் போது அந்த இணையதளம் தலைமைச் செயலகத்தில் தொடர்புடையதாக இருக்கிறது அவை ஆறு மாதங்கள் கடந்தாலும் கூட அவை இயக்குவது கிடையாது. அவை இயங்குவதற்கு முறையான நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டும் அதேபோன்று சாலைகள் இல்லாத பகுதிகளுக்கு சாலைகள் அமைப்பதற்கும் அதிக கிலோ மீட்டர் சாலைகள் அமைப்பதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைகளை ஏற்று சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென உரையாற்றினார்.

அதேபோல் இத்திட்டத்தில் சாலைகள் அமைக்கும்போது சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள் ஏற்று சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து இத்திட்டத்தை வரவேற்பதாக.சிபிஎம்,சி பி ஐ, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, காங்கிரஸ்,கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சட்டப்பேரவை உரையாற்றினார்

Tags

Next Story