தமிழகத்தில் கூடுதல் வெப்பம் பதிவு
பைல் படம்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகம் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஈரோட்டில் வடக்கு பகுதிகளில் வெப்ப அலை பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பமும், வேலூரில் 42.6 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.1 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தி பகுதியில் 41 டிகிரி செல்சியஸ், தர்மபுரி பகுதியில் 40.7 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40. 6 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.5 டிகிரி செல்சியஸ், நாமக்கலில் 40.5° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவிலும், மலைப்பகுதிகளில் 21 முதல் 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
Next Story