கிளாம்பாக்கத்தில் போதிய இடவசதி - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

கிளாம்பாக்கத்தில் போதிய இடவசதி  - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

செய்தியாளர் சந்திப்பு 

ஆம்னி பேருந்துகளை 24 ஆம் தேதியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றவேண்டும் என்பது முடியாத ஒரு காரணம். தமிழக அரசு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தப் போதிய இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் ஏற்படுத்தி தந்த பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை மாற்றுவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 24ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 24 ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்த வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி போதிய இட வசதி இல்லை இட வசதி ஏற்படுத்தி தர தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு அலுவலகம் இல்லை அலுவலகம் ஏற்படுத்தித் தரவும் கேட்டுள்ளோம். ஒரு நாளைக்கு 1000 ஆம்னி பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு செல்கின்றன 100 பேருந்துகள் நிற்கும் அளவிற்கு இட வசதி உள்ளது மீதி 900 பெறுவர்கள் எங்கே நிற்கும் ? ஆம்னி பேருந்துகளை 24 ஆம் தேதியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றவேண்டும் என்பது முடியாத ஒரு காரணம். தமிழக அரசு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் ஏற்படுத்தி தந்த பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை மாற்றுவோம்.

Tags

Next Story