உடலில் 36 அகல் விளக்குகள் ஏற்றி பத்மாசனம் செய்த ஆதினம்

உடலில் 36 அகல் விளக்குகள் ஏற்றி பத்மாசனம் செய்த ஆதினம்

அகல் விளக்குகள் ஏற்றி பத்மாசனம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 26ம்தேதி 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முத்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளியதை கொண்டாடும் வகையில் கார்த்திகை மாதம் கிருத்திகை தினத்தன்று மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது இந்நிலையில் திருவண்ணாமலையில் வருகின்ற 26 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு நேற்று முன்தினம் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கோலாகலமாக கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கியது இதனை தொடர்ந்து. தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அருணாச்சலேஸ்வரருடைய அருள் கிடைக்க வேண்டும் ன்பதனை வலியுறுத்தி அருணாச்சலம் ஆதீனம் உடலில் 36 அகல் விளக்கு ஏற்றி பத்மாசனம் செய்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story