அமைச்சர்கள், ஓபிஎஸ் மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து, வழக்கில் இருந்து அவர்களை விடுவித்ததை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Tags

Next Story