பாமக செய்தி தொடர்பாளர் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு.

பாமக செய்தி தொடர்பாளர் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு.

வழக்கறிஞர் பாலு 

சென்னையிலிருந்து விக்கரவாண்டி, கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பணிகள் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு சுமார் 160 கிலோமீட்டர் சாலை மிக மோசமாக உள்ளதால், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆண்டி மடம் வழியாக வாகனங்கள் மாற்றுபாதையில் செல்ல வேண்டியுள்ளதாக வழக்கு தொடர்ந்தார். அதற்கு, பணிகள் மூன்று கட்டமாக நடைபெற்றுவருவதாகவும், எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதில் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா ,ராஜா பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சென்னையிலிருந்து விக்கரவாண்டி கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பணிகள் எந்த நிலையில் உள்ளது? என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இன்னும் பணிகள் முடிக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி வழக்கை ஏப்ரல் 14 ம் தேதி ஒத்திவைத்தனர்.

Tags

Next Story