அதிமுக கொடி, சின்னம் வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு

அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரணை மேற்கொண்டார். பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய உரிமை உள்ளது. பன்னீர் செல்வம் நிலுவையில் மூல வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். அதற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளேன் என்று பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்து உள்ளது. ஒருங்கிணைப்பாளர் என பன்னீர் செல்வம் தன்னை அழைத்துக்கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதை தான் எதிர்க்கிறோம். வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என அழைத்துக்கொள்ளட்டும் என எடப்பாடி பழனிசாமி.

Tags

Next Story