வேங்கைவயல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
வேங்கை வயல்
வேங்கை வயல் விவகாரத்தில் புதிதாக பத்து பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்ககோரி சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட் நீதிபதி ஜெயந்தி வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
புதுக்கோட்டையை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்திய மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் உண்மை குற்றவாளி இன்னும் கண்டறியப்படாத நிலையில் இதுவரை 189 நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டு சந்தேகத்தின் பெயரில் ஐந்து சிறுவர்கள் உட்பட 35 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக பத்து பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்ககோரி சிபிசிஐடி போலீசார் புதுகை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவு விட்டார்.
Next Story