இ பி எஸ் தொடர்ந்த வழக்கில் ஓ பி எஸ் தரப்பு வாதத்திற்கு மார்ச் 12 ஆம் தேதி தள்ளிவைப்பு

ஓ பி எஸ்

இ.பி.எஸ்
அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை ஓ பன்னீர் செல்வம் பயன்படுத்த தடை கோரிய வழக்கு ஓ பி எஸ் தரப்பு வாதத்திற்காக மார்ச் 12 ஆம் தேதி ஒத்திவைப்பு.
அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடைவிதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இறுதிவிசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு தொடங்கியது. அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் என சமூக வலைதளத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பயன்படுத்துகிறார் என்று உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே இல்லாத நிலையில் ஒருங்கிணைப்பாளர் என அழைத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் ஒபிஎஸ் தரப்பு வாதத்திற்காக விசாரணை மார்ச் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Next Story


