ஒப்புகைச் சீட்டு இயந்திரம் இணைப்பு வழக்கு: செல்வ பெருந்தகை மனு
செல்வ பெருந்தகை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் இணைக்கப்பட்டதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தன்னை இணைத்துக் கொள்ள மனு அளித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் இணைக்கப்பட்டதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி பாஜக வெற்றி பெறும் என பரவலான கருத்து மக்களிடையே நிலவி வருகிறது என்றும் தெரிவித்துள்ளவர், நியாயமான தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் கொண்டு வருவது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும்,
செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார். திமுக தாக்கல் செய்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
Next Story