தேர்தல் முடிந்தவுடன் அதிமுக-பாஜக கூட்டணி - பாலகிருஷ்ணன்

தேர்தல் முடிந்தவுடன் அதிமுக-பாஜக கூட்டணி - பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன் பிரசாரம்  

தற்போது தனித்து நிற்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். தேர்தல் முடிந்தவுடன் கண்டிப்பாக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பெரம்பலூரில் நடந்த பிரச்சாரத்தின் பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு ஆதரவு கேட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய, பாலகிருஷ்ணன் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய வகையில் கடந்த பல ஆண்டுகளாக மோடி செயல்பட்டு வருகிறார். அவர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் எதுவும் பாமர மக்களுக்கும் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் உகந்ததாக இல்லை. பெரும் முதலாளிகளான அதானி, அம்பானி போன்றவர்களின் நலனுக்காகவே திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக மோடி செய்த அடக்குமுறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, தற்பொழுது மோடியை குறை சொல்லி இந்த தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

கண்டிப்பாக தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது உறுதி என்றார். தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணன், தமிழக மக்களிடம் வாங்கக்கூடிய ஜிஎஸ்டி வரியை கூட முறையாக தமிழகத்திற்கு தரவில்லை மிகக் குறைந்த அளவே ஒதுக்கீடு செய்துள்ளார் அந்த குறைந்த அளவு நிதியினை வைத்துக்கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே பலம் வாய்ந்த வெற்றிக் கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

அந்த கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அருண்நேருவிற்கு அதிக அளவிலான வாக்குகளை செலுத்தி அவரை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், பெரம்பலூர் திமுக மாவட்டபொறுப்பாளர் ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ்,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், CITU மாவட்ட செயலாளர் அகஸ்டின் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story