அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி

தேமுதிக தரப்பில் ராஜ்யசபா சீட்டு கேட்டு வருவதால் பேச்சு வார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.‌

மாநிலங்களவை சீட் ஒதுக்க அதிமுகவிடம் தேமுதிக மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் 4 மக்களவை தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 3 ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ள நிலையில் தற்போது வரை பேச்சுவார்த்தைக்கு செல்வது குறித்து முடிவெடுக்கவில்லையென தேமுதிக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவும் தேமுதிக உடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக நேற்று பிரேமலதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story