அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் : ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று நியமனம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும். குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும். தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை. தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம். நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறையை கொண்டுவர வலியுறுத்தப்படும். வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும். ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம். பெண்களுக்கு மகளிர் உரிமைத் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வலியுறுத்துவோம். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏற்கனவே நூறு நாட்கள் இருக்கக்கூடிய பணியை 150 நாட்களாக அதிகரிக்கவும், தின ஊதியத்தை 450 ஆக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்தி, மத்திய அரசே விலை நிர்ணயம் வலியுறுத்துவோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்ட வலியுறுத்துவதோடு கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட மத்திய அரசை வலியுறுத்துவோம். சென்னை முதல் மதுரை இடையே 6 வழிச்சாலையாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம். கல்வியை பொதுப்பட்டியில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம். கல்வி கடனை மத்திய அரசே முழுமையாக ஏற்று தள்ளுபடி செய்ய வலியுறுத்துவோம்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அதிமுக ஏற்கவில்லை, மாநில அரசுகளின் கருத்துக்களை பெற்று ஒத்த கருத்துகளோடு புதிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம். ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். தமிழக ரயில் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மதுரையில் ஐ ஐ டி, ஐ ஐ எம் அமைய வலியுறுத்துவோம். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம். உலகப் பொதுமறை திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர அனைத்து முயற்சிகளையும் எடுக்க வலியுறுத்துவோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களையும் ஈழத் தமிழர்களையும் உட்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவோம். விவசாயிகளுக்கு ரூ.5000 மாத ஓய்வூதியம் வழங்க வலியுறுத்துவோம். தமிழ்நாட்டுக்கான மத்திய அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்துவோம். ரயில் பயணத்தில் முதியோருக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்க வலியுறுத்துவோம். விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை ரூ.6000-லிருந்து ரூ.12000 ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்துவோம். நெல் குவிண்டாலுக்கு ரூ.5000, கரும்பு டண்ணுக்கு ரூ.6000 நிர்ணயம் செய்திட வலியுறுத்துவோம். வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படியுடன் கூடிய ஓய்வுதியும் வழங்க வலியுறுத்துவோம்.

Tags

Next Story