எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை

எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை

மூத்த  நிர்வாகிகள் வருகை 

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், வைகை செல்வன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இடம் பெற்று உள்ளனர்.

இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக சென்று அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக கருத்துகளை கேட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் இக்குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை இதன் ஒருபகுதியாக சேலம் மண்டல அ.தி.மு.க.வினரிடம் கருத்து கேட்பு கூட்டம் சூரமங்கலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் கருத்து கேட்பு குழுவினர்,சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறும்போது, ‘தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இதுவரை தாங்கள் நடத்திய கூட்டத்தில் வரப்பெற்ற கருத்துகள் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்து கூறினார்கள். இந்த கருத்துகளின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் தேர்தல் கூட்டணி பற்றியும் கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசி உள்ளார்’ என்றார்கள்.

Tags

Next Story