மக்கள் தங்கள் மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்த கட்சி அதிமுக.,
திமுக ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். எனவே உங்கள் நகைகளை கூட்டுறவு வங்கியில் அடகு வையுங்கள் என்று உதயநிதி சொன்னார். ஆட்சிக்கு வந்த பின்னர், அதில் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிக்கின்றனர். 'நீங்கள் வைத்த கடனை நாங்கள் எப்படி திருப்பி தர முடியும். எப்படி எங்களால் துறையை நடத்த முடியும்' என அமைச்சர் துரை.முருகன் கேட்கிறார்.
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. நீட் தேர்வை ரத்து செய்தனரா? கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கின்றனர். உதயநிதிக்கு சொந்த புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை, காங்கிரஸ் கட்சி ஆட்சியிலே சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், இணையமைச்சராக இருந்த திமுகவின் காந்திசெல்வன் ஆகியோர் சேர்ந்து, கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. நீட் தேர்வு, காவிரி நீர் பிரச்சினைகளை சட்டப்படிதான் தீர்வு பெற முடியும். நீங்கள் வாயிலேயே வடை சுடுகிறீர்கள், மக்களை ஏமாற்றுகிறீர்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், இனி தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எடப்பாடியார் கை காட்டுபவர் தான் பிரதமராக வர முடியும்" என்றார்.
முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான காமராஜ் பேசுகையில், "அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம், இந்த இயக்கத்திற்கு நிகரான இயக்கம், இந்திய திருநாட்டில் இல்லவே இல்லை என்று சொல்கிற அளவில் இந்த இயக்கம் வீறு கொண்டு செயல்படும் இயக்கம். சாதாரணமானவர்களை கை தூக்கி விட்ட இயக்கம் அதிமுக,. இதற்கு என்றைக்குமே அழிவில்லை; அது தேய்வே இல்லாத, என்றைக்கும் வளர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம். வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருக்கும் அதிமுகவை துவக்கியவர் எம்ஜிஆர். அவர் மனிதப் புனிதர், அவருக்கு எந்த தேவையும் இல்லை, அதே போல் நமது புரட்சித்தலைவி அம்மாவுக்கும் மக்கள் நலன் ஒன்றுதான் கவனத்தில் இருந்தது. தங்களுக்கென்று இல்லாமல் அதிமுகவுக்கு என்றே வாழ்ந்த தலைவர்கள் அவர்கள், அதனால்தான் இந்த இயக்கத்திற்கு அழிவே கிடையாது.
எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த மாபெரும் இயக்கத்திற்கு யார் தலைவர் இருக்கிறார் தளபதி இருக்கிறார் என்று கேள்வி எழுந்த போது, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இரண்டு மாதம் கொண்டு சென்றவர்தான் நமது புரட்சி தளபதி எடப்பாடி. ஆட்சியை காப்பாற்றியவர்; அதனால் அதிமுக காப்பாற்றப்பட்டது. ஆட்சி காப்பாற்றப்படவில்லை என்றால் அதிமுக கபளீகரம் செய்யப்பட்டிருக்கும். எங்களை எல்லாம் கட்டி அரவணைத்து சென்றவர் எடப்பாடி என்பதை மறந்து விடக்கூடாது. மக்கள் நினைத்த ஆட்சியை தந்தவர் எடப்பாடி. மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை மட்டுமே சிந்தனையாக கொண்டு புரட்சித் தளபதி எடப்பாடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்போது நாம் அமைத்துள்ள பூத் கமிட்டியை கண்டு எதிரிகள் மிரண்டு போவார்கள். திமுக ஆட்சி மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. பொய்யைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் திமுகவினர். ஸ்டாலின் பேச்சை நம்பி ஐந்தரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆழ்துளை கிணறு மூலம் சாகுபடி செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் ஏக்கர் போக மீதம் உள்ள குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திமுக அரசு நிவாரணம் தந்ததா, இன்றைக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் திமுக அரசின் செயல்பாடுகளால் கொதித்துப் போய் உள்ளனர், பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவோம் என்று பொய்யான வாக்குறுதியை தந்து இன்று நிறைவேற்றாமல் உள்ளனர். கடந்த தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வெறும் மூன்றரை சதவீதம் தான் வெற்றி வித்தியாசம். ஓடும் ஓட்டத்தில் இந்த வித்தியாசம் மாறும்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். மீண்டும் அம்மா ஆட்சி அமையும், எடப்பாடி முதலமைச்சராக அமர்வார். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். அதிமுக சாதாரண மக்களுக்கான கட்சி, எம்ஜிஆர் கட்சியை துவக்கிய போது, மக்கள் தங்கள் மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்த கட்சி அதிமுக, அதனை மறந்து விடாதீர்கள். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும்" என்றார்.
இக்கூட்டத்தில், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சி.வி.சேகர், மாநில விவசாயிகள் அணி இணைச் செயலாளர் மா.கோவிந்தராசு, மாவட்ட அவைத்தலைவர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு, மாநில எம்ஜிஆர் மன்றம் கார்த்திகேயன், முன்னாள் கயிறு வாரியத்தலைவர் நாடாகாடு நீலகண்டன், ஒன்றியச் செயலாளர் துரை. மாணிக்கம், கோவி. இளங்கோ, கே.எஸ். அருணாச்சலம், ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா நடராஜன், பேராவூரணி நகரச் செயலாளர் எம்.எஸ். நீலகண்டன், பெருமகளூர் பழனியப்பன், வினோத் கண்ணன், செல்வக்கிளி, ரா.க.செல்வகுமார், கூத்தலிங்கம், மீனவ ராஜன் தகவல் தொழில்நுட்ப பிரிவு சத்யராஜ் மற்றும் அதிமுகவின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.