அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தார். அதன்படி சென்னை வடக்கில் ராயபுரம் இரா.மனோகர், சென்னை தெற்கில் ஜெ. ஜெயவர்த்தன், காஞ்சிபுரத்தில் ராஜசேகர், அரக்கோணத்தில் ஏ.எல். விஜயன், கிருஷ்ணகிரியில் வி. ஜெயபிரகாஷ், ஆரணியில் ஜி. வி. கஜேந்திரன், விழுப்புரத்தில் பாக்கியராஜ், சேலத்தில் விக்னேஷ், நாமக்கலில் தமிழ்மணி, ஈரோட்டில் ஆற்றல் அசோக் குமார், கரூரில் தங்கவேல், சிதம்பரத்தில் சந்திரகாசன், நாகப்பட்டினத்தில் சுர்ஜித் சங்கர், மதுரையில் சரவணன், தேனியில் நாராயணசாமி, இராமநாதபுரம் தொகுதியில் ஜெயபெருமால் உள்ளிட்ட 16 வேட்பாளர்களை அறிவித்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பொறுத்தவரை தேமுதிகவிற்கு 5 இடங்கள் வழங்கப்படும். அது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அது குறித்து நாளை அறிவிக்கப்படும். அதே போன்று புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதியும், எஸ். டி. பி. ஐ கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story