பள்ளிகளில் ஜாதி மோதலை தடுக்க மாணவர்களுக்கு ஆலோசனை -அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளிகளை ஜாதி மோதலை தடுக்க மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக பள்ளி மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வந்திருந்தார் .ஆண்டிபட்டி ,கம்பம் ,போடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பள்ளிகளில் உள்ள நிறை குறைகளை கேட்டு அறிந்தார். அதனை தொடர்ந்து தேனியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார் . மேலும் பள்ளி மாணவர்களிடம் கல்வியின் தரத்தை பற்றி கேட்டறிந்தார். அப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி (இடைநிலை)அலுவலகம் , மற்றும் துறை சார்ந்த அலுவலகத்திற்கு சென்று ஆய்வினை மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றும், மாணவர்களுக்கு மன சோர்வினை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றும், அதை போல் மாணவர்களுக்கு கலை திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது என்றும்,பள்ளிகளில் ஜாதி மோதல்களை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.




Tags

Next Story