10 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்

10 நாட்களுக்கு பின்  கடலுக்கு மீன் பிடிக்க சென்ற  மீனவர்கள்

கடலுக்கு சென்ற மீனவர்கள் 

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த தூத்துக்குடியில் 10-நாட்களுக்கு பிறகு விசைபடகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழில் மீன்பிடித்தொழில் ஒன்றாகும். இதில் 5000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. கடந்த 17, 18 ,ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக மீனவர்கள் கடந்த 10- தினங்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதன் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இன்று( 27ம்தேதி) முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க வழக்கம்போல் செல்லலாம் என மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி தகவல் தெரிவித்தை தொடர்ந்து தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புக்கு பின் 10-நாட்களுக்கு பிறகு விசைபடகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

ஏற்கனவே கனமழை காரணமாக கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை சரியாக கொண்டாட முடியவில்லை இந்த நிலையில் 10-நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றோம் நல்ல முறையில் மீன்பிடி தொழில் அமைந்து மீன்பாடு கிடித்தால் மட்டுமே வரக்கூடிய புத்தாண்டை நல்ல முறையில் கொண்டாட முடியும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story