நீலகிரியில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் துவங்கின
இதற்கிடையே பிளஸ் -2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்து, முடிவுகளும் வெளியிடப்பட்டன. பள்ளி மாணவா்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை அளித்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தோ்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி என்பதால், பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
ஆனால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்ததால் மாணவா்களின் நலன் கருதி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜூன் 6-ம் தேதிக்கு பதிலாக, ஜூன் 10-ம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை மீண்டும் அறிவித்தது. இதையொட்டி கடந்த ஒரு வாதமாக பள்ளிகளை திறக்க தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்றூ திறக்கப்பட்டன.
கோத்தகிரி பகுதியில் முதல் நாள் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து துணை காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் போலீஸ்காரர்கள் அருணகுமார், சுரேஷ் ஆகியோர் இனிப்புகள் வழங்கி வரவேற்றது பலரையும் கவர்ந்தது . முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு புத்தகங்களும் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பள்ளிகள் திறப்பை ஒட்டி புத்தகம் வழங்குவதற்கு தேவை நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டு விட்டன.
இதேபோல அரசு உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகாவில் மாணவர்களுக்கு முதல் முறையாக பள்ளிக்கூடத்திலேயே ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதேபோல் வங்கி கணக்கு தொடங்கும் பணிகளையும் முதல் நாளே தொடங்கப்பட்டு விட்டது. இதேபோல் ஒரு சில பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். .....