கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

பைல் படம் 

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க கோரிய வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்பது ஒரு பிளாக் மெயில் முயற்சி என்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. வழக்கில் உண்மை தன்மை இல்லாவிட்டால் அதிக அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கோவில் நிலங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags

Next Story