கிராமப்புற இளைஞர்களுக்கான வேளாண் பயிற்சி முகாம்
வேளாண் பயிற்சி முகாம்
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான வேளாண் பயிற்சி முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை துறை அலுவலக வளாகத்தில் தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்க பயிற்சி நிலையம் மற்றும் மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்கப் பயிற்சி நிலையம் (குடுமியான்மலை) இணைந்து வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் மூலம் கிராமபுற இளைஞர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி ‘இயற்கை வேளாண்மை’ என்ற தலைப்பில் வரும் 24-ம் தேதி வரை பயிற்சி நடைபெறுகிறது. அதன்படி பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குநர் சண்முகம் தலைமை தாங்கினார். பயிற்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தபேந்திரன் பங்கேற்று இயற்கை வேளாண்மை சாகுபடி குறித்து எடுத்துரைத்தார். மேலும், கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் இளவரசி பங்கேற்று இயற்கை முறையில் மண் வளத்தை பாதுகாத்தல், மேம்படுத்துதல், மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் (திட்டங்கள்) செல்வராஜ் பங்கேற்று இயற்கை வேளாண்மை தொடர்பான அரசின் திட்டங்கள் குறித்தும், அங்கக இடுபொருட்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story