அதிமுகவுடன் இணைந்த பார்வர்டு பிளாக் கட்சி

அதிமுகவுடன் இணைந்த பார்வர்டு பிளாக் கட்சி

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்தது .


நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்தது .

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்து அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்துள்ளதாக தெரிவித்தனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் தேசிய துணை தலைவருமான கதிரவன், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், மாநில குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அதிமுகவில் இணைந்து இருப்பதாக தெரிவித்தார்.

தேனி, ராமநாதபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்க இருப்பதாகவும், விரைவில் தேசிய தலைவர்கள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றும், அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து வந்த நிலையில், தற்போது அதிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணைந்து இருப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story