ஒன்று சேந்த அதிமுக,பாஜக! சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு !

ஒன்று சேந்த அதிமுக,பாஜக! சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு !

வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கேள்வி நேரத்தில் கள்ளச் சாராய விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக, பாமக, பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் 50 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

சட்டசபை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கோரினர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அதிமுக உறுப்பினர்கள், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறி பதாகைகளை ஏந்தி சபாநாயகர் இருக்கை முன்பு கோஷமிட்டனர்.

இதையடுத்து சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமாரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். மேலும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல் பாஜக, பாமக எம்எல்ஏக்கள் கள்ளச்சாராய சம்பவம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி விவாதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இதையடுத்து பாஜக, பாமக எம்எல்ஏக்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags

Next Story