அதிமுக-பாஜக பிரிவு என்பது அரசியல் நாடகம்: திருமா
பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன்
அரியலூர் அடுத்த வாலாஜா நகரம் ஊராட்சியில், செவ்வாய்க்கிழமை அவர் பிரசாரத்தில் பேசியது: இந்த மக்களவைத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல சங்க பரிவார் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான போர். அதிமுக அணி வேறு, பாஜக அணி வேறு என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
இவர்கள் ஒன்றாக இருந்த போதே வெற்றி பெற முடியவில்லை. பிரிந்து நின்று வெற்றி பெற முடியாது என்று அவர்களுக்கே தெரியும். அதிமுக}வும், பாஜக}வும் அரசியல் நாடகம் ஆடுகின்றனர். தேர்தலில் திமுக-வை விமர்சனம் செய்யும் அதிமுகவினர் பாஜக}வை விமர்சிக்க மாட்டார்கள்.
மக்கள் விரோத சட்டங்களான வேளாண் மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடுகள் அமலாக முக்கிய காரணமாக இருந்தது அதிமுகவும்,பாமகவும் தான். இட ஒதுக்கீடுக்கு எதிரானவர் மோடி என்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று சிறுபான்மையினருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிரான கட்சியான பாஜகவுடன் இணைந்துள்ளார்.
சமூக நீதியை பாதுகாக்கவே திமுகவுடன் விசிக கூட்டணி. எந்த நெருக்கடிகள் வந்தாலும் எங்களது கூட்டணி தொடரும் என்று கூறி பானை சின்னத்துக்கு வாக்கு கேட்டார். பிரசாரத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் சங்கர், இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தண்டபானி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் இளங்கோவன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.