அதிமுக வேட்பாளர் விருப்பமனு - நேர்காணல் நிறைவு.

அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் விருப்ப மனு பெற்றவர்களுக்கு இரண்டாம் நாளாக மீதமுள்ள 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நேற்று நடைபெற்றது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் 2 வது நாளாக நேற்று நேர்காணல் நடைபெற்றது. கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை விருப்ப மனு அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்டது.மொத்தம் 2450 க்கு மேல் விருப்பம் மனுக்கள் விற்பனையானது. அதில் நேற்று முன்தினம் முதல் விருப்ப மனு பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

விருப்ப மனு அளித்தவர்களிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேர்காணல் ,துணை பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே பி முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது . நேற்று , காலை 9:30 மணி முதல் திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது.

பின்னர் மதியம் 2 மணி முதல் திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று காலை பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கும் நேற்று மதியம் 2 மணி முதல் சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளுக்கும் நேர்காணலும் நடைபெற்றது.

Tags

Next Story