அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தீவிர பிரச்சாரம்

மக்களின் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு தீர்வு காணும் நபராக நிச்சயம் இருப்பேன் என அதிமுக வேட்பாளார் ராயபுரம் மனோ பிரச்சாரத்தில் கூறினார்.

அதிமுக வட சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோ பெரம்பூர் பகுதியில் இன்று மாலை ஐந்தாவது நாளாக காலை பிரச்சாரத்தை முடித்து மாலையில் 35 வது வட்டம் பகுதியில் வாக்கு சேகரித்தார். ஓம் சக்தி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த பின் தொடங்கி, கொடுங்கையூர் அம்பேதகர் தெரு, அண்ணா சாலை, பாண்டியன் திரையரங்கு, ஜி.ஆர்.மண்டபம், டீச்சர்ஸ் காலனி, காவேரி சாலை வரையில் இன்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உடன் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், நட்சத்திர பேச்சாளர் பஷீர் சத்யா உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர். இருசக்கர வாகனத்திலும் உடன் நடந்தும் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வட சென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு வழங்குகிறார்கள். மத்திய மாநில அரசுகளின் மீது கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருப்பதன் வெளிப்பாடுதான் எங்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கிறார்கள்.

எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக தெளிவாகத் தெரிகிறது. பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரை கொடுங்கையூர் குப்பை கிடங்கு அகற்றும் நிச்சயம் 30 வாக்குறுதிகளில் ஒன்றாக அதை கொடுத்துள்ளோம். குப்பை கிடங்கை அங்கிருந்து அப்புறப்படுத்துவோம் அதில் மாற்று சிந்தனை இல்லை. அந்தப் பிரச்சினையை தீர்த்தாலே காற்று மாசு கடுமையான துர்நாற்றம் மாலைக்கு மேல் அந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள். கொசுத்தொல்லையிலிருந்தும் நிரந்தர தீர்வு காண, சுற்றுச்சூழலுக்கு நல்ல விஷயமாக அதை செயல்படுத்துவோம். அதிமுக பொதுச்செயலாளர் தெளிவாக சொல்லி இருக்கிறார், மூன்றரை ஆண்டுகளாக கலெக்க்ஷன், கரப்ஷன், கமிஷன் என்று மூன்று C யில் தான் அவர்கள் கவனம் உள்ளது. திறமையற்ற திராணியற்ற அரசு தான் விடியா அரசு இவர்களால் இதை மட்டும் அல்ல எதையும் செய்ய முடியாது, அதற்குத் திராணியும் தெம்பும் இல்லை. திறமையற்ற அரசு இருந்தால் ஆமை வேதத்தில் தான் பணிகள் நடக்கும். விடிய அரசில் திறமையற்ற நிர்வாகத்தால் தான் மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் குறிப்பாக மத்தியில் ஆளும் மோடி அரசின் மீதும் கடுமையான கோபத்தில் உள்ளனர் அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது, அவை வாக்குகளாகவும் மாறும். மக்கள் வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் நபராக நிச்சயம் இருப்பேன்.

Tags

Read MoreRead Less
Next Story