அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை - வைகோ

அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை - வைகோ

வைகோ 

சிவகாசியில் நாரணாபுரம் சாலையில் கட்டப்பட்டுள்ள லலிதா திருமண மஹால் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மஹாலை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக நடத்தி வருகிறார். அரசியலில் பணம் கொடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். மதுரையில் செப்டம்பரில் நடைபெறும் மாநாட்டில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை

Tags

Read MoreRead Less
Next Story