அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜர்
அதிமுக முன்னாள் அமைச்சர். கே.பி. அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அதற்கான பத்தாயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர், இதனை தொடர்ந்து நீதிமன்ற நடைமுறைகள் தொடங்கியது, முறையாக சம்மன் அனுப்பபட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட 11 பேரும் இன்று முதல் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி 19 ம்தேதி கே.பி. அன்பழகன் மற்றும் அவருக்கு தொடர்புடைய, 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர், வருமானத்திற்கு அதிகமாக 45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்திருந்தனர் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மோளையனூர் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கே.பி அன்பழகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்றினை கொடுத்திருக்கிறார், லஞ்ச ஒழி்ப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க காலம் கடக்கவே சென்னை உயர்நீதி மன்றத்தினை நாடி உத்தரவு பெற்றதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகனுக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது.