அசுரர்கள் கையில் அதிமுக, மீட்பதே இலக்கு - ஓ.பி.எஸ்

அசுரர்கள் கையில் அதிமுக, மீட்பதே இலக்கு - ஓ.பி.எஸ்

ஓ.பன்னீர் செல்வம் 

அசுரர்கள் கையில் இருக்கும் அதிமுக வை மீட்டு எடுப்பதே நம் இலக்கு திருச்செங்கோட்டில் நடந்த ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அண்ணா திமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் கூட்டம் வேலூர் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது, கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஏ கே நாகராஜ் தலைமை வகித்தார்,பழனிச்சாமி அனைவரையும் வரவேற்றார், கிழக்கு மாவட்ட செயலாளர் எம் பழனிச்சாமி முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில்ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற உறுப்பினர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது... கொங்கு மண்டலம் புரட்சி தலைவி அம்மாவின் கோட்டை. அதிமுக சட்டவிதி படி தான் சாதாரண தொண்டனும் பதவி ஏற்க முடியும் என்ற விதியின்படி நாங்கள் பதவி ஏற்றோம்.கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா தான் என தீர்மானம் நிறைவேற்றினோம் அதனை நீக்கிவிட்டு தற்போது உள்ள கூட்டத்தை வைத்துக்கொண்டு தன்னை பொதுச் செயலாளராக இபிஎஸ் அறிவித்து கொண்டுள்ளார்,

ஆனால் புரட்சித்தலைவர் காலத்தில் இருந்த அதே நிலையை மீண்டும் நாங்கள் உருவாக்குவோம் பதினாறு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் அதிமுக துவக்கப்பட்டது 30 ஆண்டுகள் உழைப்பில் கட்சியை வழிநடத்தி ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக அதிமுகவை உருவாக்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சின்னம்மா தயவு முதல்வரானவர் எடப்பாடி.

அவர் மீது டிடிவி தினகரன் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது எங்களின் 11 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தான் அவர் ஆட்சியை தொடர முடிந்தது 5 ஓட்டில் தப்பிப் பிழைத்து முதல்வரானவர் இன்று ஏதோ பேசுகிறார் அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை நடத்த வேண்டும் என கூறினேன் அதற்கு என்னை குற்றவாளி என கூறுகிறார்கள்மற்ற கட்சிகளைப் போல் பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கு வர முடியாத நிலை இருக்கக் கூடாது என கருதிய புரட்சித்தலைவர் தொண்டர்களின் நேரடி ஒட்டெடுப்பின் மூலம் தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்,அதன்படி கட்சி சட்டவிதியை உருவாக்கினார்அதன்படி தான் நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம் .

எந்த விதியை வேண்டுமானாலும்அதிமுகவில் திருத்தலாம் இந்த விதியை திருத்த முடியாது சுயமாக பொதுச் செயலாளராக முடி சூட்டிக்கொண்டவர் ஈ பி எஸ். நாடாளுமன்ற தேர்தலில் தனி கட்சிஎன போட்டியிடும் எண்ணம் இல்லை அசுரர்கள் கையில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்பது தான் தற்போது நமது குறிக்கோள் அதிமுக என்ற இந்த மாபெரும் இயக்கத்தின் தொண்டன் என்று சொன்னால் தமிழக மக்களிடம் நல்ல மரியாதை இருந்தது இன்று அது இரண்டாக மூன்றாக பிரிந்து கேள்விகுறி ஆகி விட்டது.என கூறினார். கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர்முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் எம் எல் ஏ,துணை ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், ஜேசி டி பிரபாகரன் மனோஜ் பாண்டியன் எம் எல் ஏ,கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story