அதிமுக சார்பில் விருப்ப மனு பெற்ற 20 தொகுதிகளுக்கு நேர்காணல் இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது

அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் விருப்பமனு பெற்றவர்களுக்கு முதல் நாள் 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தரப்பில் போட்டியிட பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை பொதுத் தொகுதிகளுக்கு 20 ஆயிரம் , தனி தொகுதிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் என விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்பட்டது. ஒட்டு மொத்தமாக 2450 கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இன்றும் நாளையும், விருப்ப மனு பெற்றவர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. இன்று காலை 9:30 மணி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , உடன் துணை பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே பி முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர். இன்று காலை 9:30 மணி முதல் திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும், இன்று மதியம் 2 மணி முதல் திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. அதே போல் நாளை காலை 9:30 மணி முதல் பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு நேர்காணலும், நாளை மதியம் 2 மணி முதல் சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளுக்கும் நேர்காணலும் நடைபெற உள்ளது. அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு வேண்டியும், பொதுச் செயலாளர் பெயரில் விருப்பமனு அளித்துள்ள கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள். விருப்பமனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து நேர்காணலில் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags

Next Story